tag:blogger.com,1999:blog-250522962008-05-23T04:16:22.404+03:00அல்லுஃலுவு வல்மர்ஜான்Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comBlogger682125tag:blogger.com,1999:blog-25052296.post-26188939335689826382008-05-23T04:16:00.001+03:002008-05-23T04:16:22.823+03:00தங்க வெள்ளிப் பாத்திரங்களை உண்ண பருக உபயோகிக்கத் தடை.
ஆடை அணிகலன்கள்.

1337. வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் நரக நெருப்பையே விழுங்கி நிரப்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5634 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலி) .
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-70936698677900069672008-05-22T00:01:00.001+03:002008-05-22T00:01:01.799+03:00எந்த உணவையும் குறை கூறாதே..1336. நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டு விடுவார்கள்.

புஹாரி : 3563 அபூஹூரைரா (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-65437195070627530892008-05-21T05:59:00.001+03:002008-05-21T05:59:00.493+03:00இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் உண்ணுகிறான்.1334. இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; 'இறைமறுப்பாளன்' அல்லது 'நயவஞ்சகன்' ஏழு குடல்களில் சாப்பிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5394 இப்னு உமர்(ரலி).

1335. ஒருவர் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றார். (அதிலிருந்து) குறைவாக உண்பவராகிவிட்டார். இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அவர்கள், 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்'' என்று கூறினார்கள்.

புஹாரி :5397 அபூஹூரைரா (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-12960397907802782402008-05-20T06:28:00.001+03:002008-05-20T06:28:00.886+03:00இருவரின் உணவு மூவருக்குப் போதுமானது.1333. இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5392 அபூ ஹுரைரா (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-72644953539545079442008-05-19T07:28:00.001+03:002008-05-19T07:28:03.027+03:00தம்மைக் காட்டிலும் பிறரின் தேவைக்கு முன்னுரிமையளித்தல்.1330. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.''.. அல்லது 'இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.''.. என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (விருந்தளிக்கிறேன்)'' என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) 'இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, 'நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், 'உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று கூறினார். அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச் சரிசெய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்'' என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.

புஹாரி : 3798 அபூஹூரைரா (ரலி).

1331. நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், 'உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாவு அளவு உணவு தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது. பிறகு, மிக உயரமான (முரட்டு சுபாவம் கொண்ட) தலைவிரிகோலமான இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டி வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், '(இவை) விற்பதற்காகவா? அன்பளிப்பாகவா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை. விற்பதற்காகத் தான் (கொண்டு வந்துள்ளேன்)'' என்று பதிலளித்தார். அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் வாங்கினார்கள்; அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்றி முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்குமே அதன் ஈரலில் இருந்து ஒரு துண்டை நபி (ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்திருந்தார்கள். அங்கிருந்தவருக்கு அதைக் கொடுத்தார்கள். அங்கில்லாதவருக்கு எடுத்து (பாதுகாத்து) வைத்தார்கள். இரண்டு (அகன்ற) தட்டுகளில் அவற்றை வைத்தார்கள். அனைவரும் உண்டார்கள். நாங்களும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரண்டு தட்டுகளும் அப்படியே மீதமாகிவிட்டன. அவற்றை நாங்கள் ஒட்டகத்தில் ஏற்றிச் சென்றோம்.

புஹாரி : 2618 அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் (ரலி).

1332. திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் 'இருவருக்குரிய உணவு யாரிடம் உள்ளதோ அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை அழைத்துச் செல்லட்டும்! நான்கு பேருக்குரிய உணவு இருந்தால் ஐந்தாவது, ஆறாவது நபர்களாக திண்ணைத் தோழர்களை அழைத்துச் செல்லட்டும்!' எனக் கூறினார்கள். அபூ பக்ர் (ரலி) மூன்று நபர்களை அழைத்துச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் பத்து நபர்களை அழைத்துச் சென்றனர். (வீட்டில்) நானும் என் தந்தை (அபூ பக்ரும்) தாயும் என்னுடைய வீட்டிற்கும் (என் தந்தை) அபூ பக்ருடைய வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்து வரும் வேலையாளும் இருந்தோம். என் மனைவியும் என்று அவர் குறிப்பிட்டாரா இல்லையா என்று அடுத்த அறிவிப்பாளர் சந்தேகம் தெரிவிக்கிறார். அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு, இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தனர். 'உங்கள் விருந்தினரை விட்டுவிட்டு எங்கே தங்கி விட்டீர்?' என்று அவர்களின் மனைவி கேட்டனர். அதற்கு அபூபக்ர் (ரலி), 'அவர்களுக்கு இன்னும் நீ இரவு உணவு அளிக்கவில்லையா?' என்று திருப்பிக் கேட்டார்கள். 'உணவை முன் வைத்த பின்பும் நீங்கள் வருவது வரை அவர்கள் உண்ண மறுத்துவிட்டனர்' என்று மனைவி கூறினார். (என் தந்தை கோபிப்பார் என்பதை அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.

'அறிவிலியே!' 'மூக்கறுபடுவாய்!' என என்னை ஏசினார்கள். பிறகு மகிழ்வற்ற நிலையில் 'சாப்பிடுங்கள்! அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒருபோதும் நான் சாப்பிட மாட்டோம்' என்று (தம் குடும்பத்தினரை நோக்கிக்) கூறினார்கள். நாங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும்போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. அனைவரும் வயிறு நிரம்ப உண்டார்கள். அதற்கு முன்னிருந்ததை விட உணவு அதிகமாக இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விட அதிகமாக உணவு இருப்பதைக் கண்ட அபூபக்ர் (ரலி) 'பனூ ஃபிராஸ் சகோதரியே! இது என்ன?' என்று (தம் மனைவியிடம்) வினவினார்கள். அதற்கவர் 'என் கண் குளிர்ச்சியின் மேல் ஆணை! இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு இப்போது அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூ பக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள். காலை வரை அது அங்கேயே இருந்தது. எங்களுக்கும் ஒரு கூட்டத்தினருக்குமிடையே உடன் படிக்கை ஒன்று இருந்தது. அந்தக் கெடு முடிந்துவிட்டது. (அது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தவர்களை) பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைவரின் கீழ் அமைத்தோம். அவர்களில் ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். அவர்கள் அனைவரும் அந்த உணவிலிருந்து சாப்பிட்டார்கள்.

புஹாரி : 602 அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-6866965764839090362008-05-18T00:32:00.001+03:002008-05-18T00:32:27.431+03:00அரக்கு மரத்தின் பழங்கள் பற்றி..1329. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ('மர்ருழ் ழஹ்ரான்' என்னுமிடத்தில்) 'அராக்' (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற்றில் மிக நல்லது'' என்று கூறினார்கள். மக்கள், 'நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?' என்று கேட்டனர். அதற்கு அவர்கள், 'ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3406 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-30257123693677203332008-05-17T05:04:00.002+03:002008-05-17T05:04:58.650+03:00கண்ணுக்கு மருந்தாகும் சமையல் காளான்.1328. சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 4478 ஸயீத் இப்னு ஸைத் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-81615247997310874542008-05-16T05:25:00.001+03:002008-05-16T05:25:00.779+03:00மதீனத்துப் பேரீத்தங்கனிகளின் சிறப்பு.1327. தினந்தோறும் காலையில் சில 'அஜ்வா' ரகப் பேரீச்சம் பழங்களை (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5768 ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-81685506808686348272008-05-15T00:15:00.001+03:002008-05-15T00:15:06.591+03:00தடுக்கப்பட்ட உண்ணும் முறை.1326. நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களைப் பஞ்சம் தீண்டியது. எனவே, இப்னு ஸுபைர் (ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது இப்னு உமர் (ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, 'இறைத்தூதர் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தன் சகோதரிடம் அனுமதி பெற்றாலே தவிர'' என்று கூறுவார்கள்.

புஹாரி : 2455 ஜபாலா (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-83151971308230653752008-05-14T06:08:00.001+03:002008-05-14T06:08:00.687+03:00வெள்ளரிக்காயுடன் பேரீச்சச் செங்காய்களை உண்ணுதல்.1325. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை கண்டேன்.

புஹாரி :5440 அப்துல்லாஹ் பின் ஜாபிர் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-15746415747934484482008-05-13T00:17:00.001+03:002008-05-13T00:17:12.325+03:00சுரைக்காயை விரும்பி உண்ணுதல்.1324. 'ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி (ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர்ந்தி போடப்பட்ட குழம்பையும் நபி (ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்; நபி (ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகி விட்டேன்!''

புஹாரி : 2092 அனஸ் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-33914960052930266072008-05-12T07:40:00.001+03:002008-05-12T07:40:01.060+03:00மிக நெருக்கமான நட்புடையவர் விருந்துக்கு அவர் அழைக்காதவர்களை விருந்துக்கு அழைத்துச் செல்தல்.1322. (போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, 'நபி (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா?' என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு 'ஸாவு' அளவு வாற்கோதுமையிலிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக்குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும்போது அவளும் (அரைத்து) முடித்துவிட்டாள். மேலும் அதனைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும்போது என் மனைவி,) 'இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிட வேண்டாம். ('உணவு கொஞ்சம் தானிருக்கிறது' என்று கூறிவிடுங்கள்)'' என்று சொன்னாள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு 'ஸாவு' அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்'' என்று அழைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலில், 'அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்'' என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஜாபிர் - ரலி - அவர்களிடம்), 'நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்கவேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்'' என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி - ஸல் - அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள். உடனே நான், 'நீ நபி (ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன்'' என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி (ஸல்) அவர்கள் அதில் (தம் திரு வாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), 'ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் உன்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே'' என்று கூறினார்கள். அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவைவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்தமெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சம் குறையாமல்) முன்பிருந்தது போன்றே இருந்தது. மேலும், எங்கள் குழைத்தமாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போன்றே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.

புஹாரி :4102 ஜாபிர பின் அப்துல்லாஹ் (ரலி).

1323. அபூ தல்ஹா (ரலி) (தம் மனைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், 'நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்) பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி), 'ஆம், இருக்கிறது'' என்று கூறிவிட்டு வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு, உம்மு சுலைம் (ரலி), தம் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் அதைச் சுருட்டி என் கை (அக்குளு)க்குக் கீழே அதை மறைத்து வைத்து அதன் ஒரு பகுதியில் என் கையைக் கட்டிவிட்டார்கள். பிறகு என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்கள் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'உன்னை அபூ தல்ஹா அனுப்பினரா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்றேன். 'உணவுடனா அனுப்பியுள்ளார்?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) தம்முடன் இருந்தவர்களிடம், 'எழுந்திருங்கள்'' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில், அபூ தல்ஹா (ரலி) அவர்களிடம் வந்து (நபி - ஸல் - அவர்கள் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருக்கும்) விபரத்தைத் தெரிவித்தேன். உடனே, அபூ தல்ஹா (ரலி) (என் தாயாரிடம்), 'உம்மு சுலைமே! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு உணவளிக்க எதுவுமில்லையே'' என்று கூறினார்கள். உம்மு சுலைம் (ரலி), 'அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்'' என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா (தாமே நபி-ஸல்- அவர்களை முன்சென்று வரவேற்பதற்காக) நடந்து சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ தல்ஹா தம்முடனிருக்க, உம்மு சுலைம் அவர்களை நோக்கிச் சென்று, 'உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டு வா!'' என்று கூறினார்கள். உடனே, அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி உத்திரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம் (ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடியவற்றை (பிஸ்மில்லாஹ்வையும் மற்ற பிரார்த்தனைகளையும்) கூறினார்கள். பிறகு, 'பத்து பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்'' என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா (ரலி) அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், 'இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா (ரலி) அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, 'பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா (ரலி) அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, 'பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா (ரலி) அனுமதி கொடுத்தார்கள். பிறகு, அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் இருந்தார்கள்.

புஹாரி : 3578 அனஸ் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-66933026737213898512008-05-11T06:22:00.003+03:002008-05-11T06:23:23.362+03:00விருந்தினருடன் வந்த அழைக்காத நபர் பற்றி..
1321. அபூ ஷுஐப் என்ற அன்ஸாரி, (பிராணியை) அறுத்துத் துண்டு போடும் தம் ஊழியரிடம், 'ஐவருக்குப் போதுமான உணவை எனக்குத் தயார் செய்! ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களையும் நான் அழைக்கப் போகிறேன்; ஏனெனில், அவர்களின் முகத்தில் பசியை நான் உணர்ந்தேன்!'' என்று கூறிவிட்டு. ஐவரையும் அழைத்தார். அவர்களுடன் வேறு ஒரு மனிதரும் சேர்ந்து வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இந்த மனிதர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு அனுமதியளிக்க நீர் விரும்பினால் (அவ்வாறே) அனுமதி அளிப்பீராக! இவர் திரும்பி விட வேண்டும் என நீர் விரும்பினால் திரும்பி விடுவார்!'' என்று கூறினார்கள். அதற்கு அபூ ஷுஐப் (ரலி) 'இல்லை! அவருக்கு நான் அனுமதியளித்து விட்டேன்!'' என்றார்கள்.

புஹாரி : 2081 அபூமஸ்ஊது (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-74577514593945108142008-05-10T06:11:00.001+03:002008-05-10T06:11:01.420+03:00உணவு உண்டு முடித்ததும் சாப்பிட்ட விரல்களைச் சூப்புதல்.
1320. உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ளவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5456 இப்னு அப்பாஸ் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-63904703479386750322008-05-09T04:35:00.001+03:002008-05-09T04:35:00.910+03:00சபையில் வலப்புறம் பேணுதல்.1318. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடைய இதே வீட்டில் எங்களிடம் வந்து தண்ணீர் புகட்டும்படி கேட்டார்கள். ஆகவே நாங்கள் எங்களுடைய ஓர் ஆட்டின் பாலை அவர்களுக்காகக் கறந்தோம். பிறகு நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களும் எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். நபி (ஸல்)அவர்கள் பாலைக் குடித்து முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் இதோ அபூபக்ர் என்று கூறினார்கள். எனினும் நபி (ஸல்) அவர்கள் தமது (பாலின்) மீதத்தை கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு வலப்பக்கத்திலிருப்பவர்களே முன்னுரிமையுடையவர்கள். ஆகவே வலப்ப்பத்திலிருப்பவர்களுக்கே முதலிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள் அது நபிவழியாகும் அது நபிவழியாகும் என்று மும்முறை கூறினார்கள்

புஹாரி : 2571 அனஸ் (ரலி).

1319. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), 'சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்'' என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள்.

புஹாரி : 2351 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-30284956048339760422008-05-08T06:29:00.001+03:002008-05-08T06:29:34.241+03:00குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடாதே.1316. (குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி:154 அபூகதாதா (ரலி).

1317. (என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும்போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள்.

புஹாரி :5631 துமாமா பின் அப்துல்லாஹ் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-1450588684247419312008-05-07T05:56:00.001+03:002008-05-07T05:58:34.786+03:00நின்று கொண்டு குடித்தல்.1315. நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு குடித்தார்கள்.

புஹாரி : 1637 இப்னு அப்பாஸ் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-54619159160103672722008-05-06T06:15:00.001+03:002008-05-06T06:15:01.275+03:00உண்ணும் பருகும் முறையில் பேணுதல்.1313. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக்கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!'' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

புஹாரி : உமர் பின் அபீஸலமா (ரலி).

1314. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை 'இக்தினாஸ்' செய்ய வேண்டாமெனத் தடை விதிப்பதை கேட்டுள்ளேன். ('இக்தினாஸ்' என்றால், தோல் பைகளின் வாய்ப் பகுதியி(னை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதி)லிருந்து பருகுவதாகும்'')

புஹாரி : 5626 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-16510951678956498962008-05-05T06:46:00.004+03:002008-05-05T06:50:15.397+03:00மாலை நேரம் பிள்ளைகளை வெளியில் விடாதே.1310. இரவின் முற்பகுதி வந்துவிட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.

புஹாரி :3307 ஜாபிர் (ரலி).

1311. நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6293 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1312. மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது 'நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்'' என்றார்கள்.

புஹாரி : 6294 அபூமூஸா (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-50522423293749071292008-05-04T06:40:00.001+03:002008-05-04T06:40:22.967+03:00பானமுள்ள பாத்திரத்தை மூடுதல்.
1309. அபூ ஹுமைத் அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ(ரலி) 'அந்நகீஉ' (எனும் கால்நடை பராமரிப்பு மையத்தில்) இருந்து ஒரு கோப்பைப் பால் கொண்டுவந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'இதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள்.

புஹாரி : 5605 ஜாபிர் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-6319345078801729872008-05-03T01:53:00.001+03:002008-05-03T01:53:34.495+03:00பால் குடித்தல் பற்றி....1307. நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்றபோது சுராக்கா இப்னு மாலிக் இப்னி ஜுஃஷும் என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்) பின்தொடர்ந்து சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராக (அவரைச் செயலிழக்கச் செய்யும் படிப்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரின் குதிரை அவருடனேயே பூமியில் அழுந்திவிட்டது. சுராக்கா (நபியவர்களிடமே), 'எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாகத்துடனிருக்க, ஓர் ஆட்டிடையன் அவ்வழியே சென்றான். உடனே, அபூபக்ர் (ரலி) ஒரு கிண்ணத்தை எடுத்து (ஆடு ஒன்றிலிருந்து) சிறிது பாலை அதில் கறந்து அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அபூ பக்ர் அவர்கள் திருப்தியடையும் வரை நபி (ஸல்) அவர்கள் (அதிலிருந்து) அருந்தினார்கள்.

புஹாரி :3908 அல் பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1308. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'ஈலியா' (எனும் ஜெரூசலத்து)க்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாரிடம் மது மற்றும் பால் கோப்பைகள் இரண்டு கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டையும் அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, பால் கோப்பையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் 'உங்களை இயற்கை நெறியின் பக்கம் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மதுக் கோப்பையை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4709 அபூஹூரைரா (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-59812266119917849572008-05-02T04:20:00.001+03:002008-05-02T04:20:01.412+03:00போதை தராதவற்றை பருக அனுமதி.1304. அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி), தம் திருமணத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்தார்கள்.) மணப்பெண்ணாயிருந்த அபூ உசைதுடைய துணைவியார் (உம்மு உசைத்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்(குப் பருகக் கொடுப்பதற்)காக மணப்பெண் (உம்மு உசைத்) என்ன ஊறவைத்தார் தெரியுமா? இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குகென்றே (தண்ணீரில்) பேரீச்சம் பழங்களை (முந்தைய) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் ஊறப்போட்டு வைத்திருந்தார். (நபி (ஸல்) அவர்கள் மணவிருந்தைச் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்.

புஹாரி :5183 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி).

1305. அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி) (தம்) மணவிருந்தின்போது நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூ உசைத் (ரலி) அவர்களின் துணைவியார் (மணப்பெண்) உம்மு உசைத் (ரலி) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள். உம்மு உசைத் (ரலி) (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரலி) அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தம் கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக ஊட்டினார்கள்.

புஹாரி : 5182 ஸஹ்ல் (ரலி).

1306. நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பனூ சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது'' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்'' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவதியாகி விட்டேனே'' என்று (வருத்தத்துடன்) கூறினாள். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் முன்னே சென்று 'பனூ சாஇதா' குலத்தாரின் சமுதாயக் கூடத்தில் அமர்ந்தார்கள். பிறகு 'எங்களுக்குப் பருக (ஏதேனும்) கொடுங்கள். சஹ்லே!'' என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்காக இந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று அதில் அவர்களுக்குப் புகட்டினேன்.(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹாஸிம் (ரஹ்) கூறினார்: ஸஹ்ல் (ரலி) அந்தக் கிண்ணத்தை எங்களுக்காக வெளியே எடுக்க அதில் நாங்கள் பருகினோம். பிறகு உமர் இப்னு அப்தில் அஜீஸ் (ரஹ்) அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்க, ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்.

புஹாரி :5637 ஸஹ்ல் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-12573272008513692132008-05-01T06:04:00.001+03:002008-05-01T06:04:00.351+03:00போதை தரும் மதுவை அருந்தியவன் திருந்தி தவ்பா செய்க.
1303. எவனொருவன் போதை தரும் மதுவை அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5575 இப்னு உமர் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-24500034223816042902008-04-30T00:21:00.001+03:002008-04-30T00:21:12.616+03:00போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.1301. 'போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 242 ஆயிஷா (ரலி).

1302. நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, '(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)'' என்று (அறிவுரை) கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் வாற்கோதுமையில் தயாரித்த ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாரித்த ஒருவகை பானமான 'பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் விலக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 4344 அபூபுர்தா (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25052296.post-60081411526245496432008-04-29T01:36:00.002+03:002008-04-29T01:37:46.247+03:00மது ஊற வைக்கப்படும் குடுவைகள் பற்றி...1296. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , '(மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவையிலும், தார் பூசப்பட்ட பீப்பாயிலும் (பேரீச்சம் பழச்சாற்றை அல்லது திராட்சைப்) பழச்சாற்றை ஊற்றி வைக்காதீர்கள்'' என்று சொன்னதாக அனஸ் (ரலி) எனக்கு அறிவித்தார்கள்.

புஹாரி : 5587 அனஸ் (ரலி).

1297. நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவையையும், தார் பூசப்பட்ட பாத்திரத்தையும் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

புஹாரி : 5594 அலீ (ரலி).

1298. நான் அஸ்வத் இப்னு யஸீத் (ரஹ்) அவர்களிடம் 'எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பது விரும்பத்தகாதது என இறை
நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நீங்கள் வினவியதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம் (வினவினேன்). இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரான எங்களை சுரைக்காய் குடுவையிலும் தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்'' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) கூறினார்:) 'சுட்ட களிமண் பாத்திரத்தையும் மண்சாடியையும் ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடவில்லையா?' என கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்) 'நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கேட்காத ஒன்றை உங்களுக்கு அறிவிக்க வேண்டுமா?' என்று கூறினார்கள்.

புஹாரி : 5595 இப்ராஹீம் (ரலி).

1299. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'மது வைத்திருந்த மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கை உங்களுக்கு நான் தடை செய்கிறேன்' என்று கூறினார்கள். (பின்னர் இத்தடை நீக்கப்பட்டது)

புஹாரி : 1398 இப்னு அப்பாஸ் (ரலி).

1300. நபி (ஸல்) அவர்கள் தோலால் ஆன நீர்ப்பாத்திரங்க(ளைத் தவிர மற்றவைக)ளுக்குத் தடை விதித்தபோது, 'மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே'' என்று சொல்லப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்தார்கள்.

புஹாரி : 5593 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).
Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com