இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்
வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்..
53. நான் நபி(ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது'' என்று கூறினார்கள். நான், 'நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்'' என்று சொல்லிவிட்டு, 'பிறகு எது?' என்று கேட்டேன். 'உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்க, அவர்கள், 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று கூறினார்கள்.
புகாரி :4477 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)
பெரும் பாவங்கள் குறித்து..
54- (ஒரு முறை)பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்)அவர்கள் (மூன்றுமுறை)கேட்டார்கள். மக்கள்,ஆம் அல்லாஹ்வின்தூதரே!(அறிவியுங்கள்)என்று சொன்னார்கள். உடனேநபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும்(தான் அவை)என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள்ளுங்கள். பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்)தான் என்று கூறினார்கள். நிறுத்திக் கொள்ளக் கூடாதா, என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக்கூறிக் கொண்டிருந்தார்கள்.
புகாரி-2654: அபூபக்ரா(ரலி)
55- நபி(ஸல்)அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றிக்கேட்கப்பட்டது. நபி(ஸல்)அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றொருக்கு துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும்பாவங்களாகும்) என்று கூறினார்கள்.
புகாரி-2653: அனஸ்(ரலி)
56- அழித்தொழிக்கும் ஏழு பெரும்பாவங்களைத் தவிருங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். நுபி(ஸல்)அவர்கள்,அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது எனஅல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஒடுவதும்,அப்பாவிகளான இறைநம்பிக்கைக் கொண்ட,கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்(அந்தப் பெரும் பாவங்கள்)என்று பதில் கூறினார்கள்.
புகாரி-2766: அபூஹுரைரா(ரலி)
57-ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும், என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு
நபி(ஸல்)அவர்கள், ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார், உடனே(பதிலுக்கு)அவர் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார்.(ஆக,தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)என்றார்கள்.
புகாரி-5973: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)
இணைவைக்காது மரணித்தோர் சுவனில்..
58- யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார், என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (அப்படியாயின்) யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார் என நான் கூறுகிறேன்.
புகாரி-1238: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரலி)
59- எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். உடனே நான்,அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா? எனக்கேட்டேன். அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும் தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-1237: அபூதர்(ரலி)
60- நபி(ஸல்)அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொணடபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹவைத் தவிர வேறெவரும் இல்லை)என்று சொல்லி பிறகு அதே நம்பிக்கையில் இறந்து விடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகந்தே தீருவார், என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள். நான் அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? ஏன்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள் "அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி(சொர்க்கம் புகந்தே தீருவார்)" என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள் அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி(சொர்க்கம் புகந்தே தீருவார்) என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக)அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? ஏன்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள் அவர் விபச்சாரம் புரிந்தாலும் திரடினாலும் சரி(சொர்க்கம் புகுந்தே தீருவார்)அபூதரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!(அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)என்று கூறினார்கள்.
அபூதர்(ரலி)அவர்கள் இதை அறிவிக்கும் போது அபூதரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே, என்று கூறிவந்தார்கள்.
புகாரி-5827: அபூதர்(ரலி)
வணக்கத்திற்குறிய நாயன் வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஒரு நிராகரிப்பவன் வாயால் மொழிந்த பின் அவனைக் கொல்வது பற்றி..
61- பனூ ஸூஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பராயிருந்தவரும், அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்களுடன் பத்ரில் கலந்து கொண்டவருமான மிக்தாத் பின் அம்ர் அல் கிந்தீ(ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்களிடம், இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என் கை ஒன்றை வாளால் துண்டித்து விட்டான். பிறகு, அவன் என்னை விட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக் கொண்டு, அல்லாஹ்வுக்கும் கீழ்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன் என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின்தூதரே! என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின்தூதர் நபி(ஸல்)அவர்கள்,(வேண்டாம்) அவனைக் கொல்லாதே என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத்(ரலி)அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவன் என் கை ஒன்றைத் துண்டித்து விட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்! என்றுகேட்க, அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள்,அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்று விட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த(குற்றமற்ற)நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த(குற்றவாளியான) நிலைக்கு நீ சென்று விடுவாய், என்று கூறினார்கள்.
புகாரி-4019: உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார்(ரஹ்)
62- எங்களை அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் ஹுரக்கா கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம்.(அவர்களுடன் நடந்த சண்டையில்)அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்ட போது, அவர் -லா இலாஹ இல்லல்லாஹ்- அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி)வந்தபோது நபி(ஸல்)அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், உஸாமாவே! அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று (ஏகத்துவ வாக்கியத்தை)மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்? என்று கேட்டார்கள். நான் (நாங்கள் அவரைக் கொன்று விடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு சொன்னார் என்று சொன்னேன்.(ஆனால் என் சமாதானத்தை ஏற்காமல்) நபி(ஸல்)அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே,(பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன்.
புகாரி-4269: உஸாமா பின் ஸைத்(ரலி)
No comments:
Post a Comment