Sunday, May 07, 2006

ஒப்பாரி, கன்னங்களில் அடித்துக் கொள்வது..

ஒப்பாரி வைப்பது கன்னங்களில் அடித்துக் கொள்வது, சட்டையைக் கிழித்துக் கொள்வது, அறியாமைக் கால கலாச்சாரங்களில் ஈடுபடுவது குறித்து..
65- (துன்பத்தின் போது)கன்னங்களில் அறைந்து கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-1298: அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி)

66- (என் தந்தை)அபூ மூஸா தமது கடுமையான மரண வேதனையால் மயக்கமடைந்து விட்டார். அவரது தலை அவரது மனைவியின் மடியில் இருந்தது. தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பின்பு மயக்கம் தெளிந்த போது நிச்சயமாக நபி(ஸல்)அவர்கள் (துன்பத்தின்போது)அதிக சப்தமிட்டு அழும் பெண்ணை விட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் ஆடைகளை கிழித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் தம்மை விலக்கிக் கொண்டார்கள். எவரிடமிருந்து நபி(ஸல்)அவர்கள் தம்மை விலக்கிக் கொண்டார்களோ அவரிடமிருந்து நானும் விலகிக் கொள்கிறேன், என்று கூறினார்.
புகாரி-1296: அபூ புர்தா பின் அபீ மூஸா

No comments: