Wednesday, August 16, 2006

"தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா"

98- அல்லாஹ்வின்தூதர் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி( ஸல்) அவர்கள், அபூதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன்.அதற்கு அவர்கள்,இது இறைவனுக்கு(அவனது அரியாசனத்திற்குக் கீழே) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காகச் செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம் நீ எங்கிருந்து வந்தாயோ,அந்த இடத்திற்கே திரும்பிச் செல், என்று சொல்லப்பட்டு விட்டதைப் போன்று இருக்கும். உடனே அது மறைந்த இடத்திலிருந்து (இறுதிநாளில்) உதயமாகும், என்று சொல்லி விட்டு, அது தான் அது நிலைகொள்ளும் இடமாகும் (தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா) என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்களது ஓதல் முறைப்படி (36:38-ஆவது வசனத்தை) ஓதினார்கள்.

புகாரி-7424: அபூதர் அல்ஃகிஃபாரீ(ரலி)

No comments: