Thursday, August 24, 2006

பால் Vs மது

106- என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூஸா (அலை) அவர்களைப் பார்த்தேன். அவர்கள் ஷனூஆ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணைத் தடவிப்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈஸா அவர்களைப் பார்த்தேன். அவர் நடுத்தர வயதுடைய சிகப்பான மனதராகவும் (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்றும் இருந்தர்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததிகளிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நான் தான். பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது. மற்றொன்றில் மது இருந்தது (வானவர்) ஜிப்ரீல் (அலை); அவர்கள், இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்களோ அதைக் குடியுங்கள் என்று கூறினார்கள். நான் பாலை எடுத்துக் குடித்தேன். நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக் கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும் என்று சொன்னார்கள்.

புகாரி- 3394: அபூஹூரைரா (ரலி)

No comments: