Thursday, February 28, 2008

தாயிஃப் யுத்தம்.

1165. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்டபோது அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, 'இறைவன் நாடினால் நாம் (நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்'' என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு வருத்தமளித்தது. அவர்கள், 'இதை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா?' என்று பேசிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்) ஒரு முறை, 'நாம் திரும்பிச் செல்வோம்'' என்று கூறினார்கள். பிறகு (தோழர்களின் தயக்கத்தைக் கண்டு) முற்பகலிலேயே போர் புரியுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் முற்பகலில் போர் புரிய, (அதனால்) (பலத்த) காயங்களுக்கு ஆளானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இறைவன் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு (இப்போது) மகிழ்ச்சியை அளித்தது. (அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு) நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

புஹாரி : 4325 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

No comments: