ஆட்சியதிகாரத்தில் குறைஷியருக்கு முன்னுரிமை.
1193. மக்கள் அனைவரும் இந்த (அட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லீமாயிருப்பவர் குறைஷிகளில் முஸ்லீமாயிருப்பவரைப் பின்பற்றுபவராவார். மக்களில் உள்ள இறைமறுப்பாளர் குறைஷிகளில் உள்ள இறை மறுப்பாளரைப் பின்பற்றுபவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3495 அபூஹுரைரா (ரலி).
1194. இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3501 இப்னு உமர் (ரலி)
1195. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், 'பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்'' என்று சொல்ல கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா (ரலி) அவர்கள், 'அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்'' என்று (நபி (ஸல்) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.
புஹாரி :7222 ஜாபிர் பின் ஸமுரா (ரலி).
No comments:
Post a Comment