தேன் ஒரு நோய் நிவாரணி.
1432. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது'' என்று கூறி)டவே, மீண்டும் நபி (ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி (ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை)'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்'' என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.
No comments:
Post a Comment