Friday, August 08, 2008

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகச் சிறந்தவர்.

1491. நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப் படும்படி) என்னை 'ச்சீ'' என்றோ, '(இதை) ஏன் செய்தாய்'' என்றோ, 'நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?' என்றோ அவர்கள் சொன்னதில்லை.

புஹாரி :6038 அனஸ் (ரலி).

1492. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னுடைய கையைப் பிடித்து அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! அனஸ் புத்திசாலிப் பையன். அவன் தங்களுக்குப் பணிவிடை செய்யட்டும்'' என்றார்கள். அதன்படி நான் நபி (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் போதும் பயணத்தில் இருக்கும்போது அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் செய்த எதைப் பற்றியும் 'இதை ஏன் நீ இப்படிச் செய்தாய்?' என்றோ, நான் செய்யாத எதைப் பற்றியும் 'இதை ஏன் நீ இப்படிச் செய்யவில்லை?' என்றோ நபியவர்கள் என்னிடம் கேட்டதில்லை.

புஹாரி :6911 அனஸ் (ரலி)

No comments: