Sunday, December 03, 2006

தொழுகையில் அல்லாஹ்வைப் புகழ்தல்..

229-'இமாம் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' என்று கூறும்போது நீங்கள் 'அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து' எனக் கூறுங்கள்! யாருடைய இந்தக் கூற்று வானவர்களின் கூற்றுடன் ஒத்து அமைகிறதோ அவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

புஹாரி 796 :அபுஹூரைரா (ரலி)

230- இமாம் ஆமீன் கூறும் போது நீங்களும் ஆமீன் கூறுங்கள்! எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைகின்றதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.

புஹாரி-780: அபூஹுரைரா (ரலி)

231- இமாம் கைருல் மக்லூபி அலைஹிம் வலழ்ழாலீன் என்று கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகின்றதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-782: அபூஹுரைரா (ரலி)

No comments: