ஸுப்ஹூ, அஸர் தொழுகையின் மகத்துவம்.
367- இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்ற அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களை விட்டு விட்டு வருகிறோம் என்று அவர்கள் விடையளிப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-555: அபூஹுரைரா (ரலி)
368- நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்கள் இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்! என்று கூறிவிட்டு சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உமது இறைவனின் புகழைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 50:39) என்ற இறை வசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.
புகாரி-554: ஜரீர் (ரலி)
369- பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது ஃபஜ்ரு, அஸர் தொழுகைகளை) யார் தொழுகிறாரோ அவர் சுவர்க்கத்தில் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-574: அபூமூஸா (ரலி)
No comments:
Post a Comment