Tuesday, April 24, 2007

ஜனாஸா தொழுகையில் தக்பீர் கூறுதல்

555.நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஸி (மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

புஹாரி : 1245 அபூஹூரைரா (ரலி)

556. (அபிசீனிய மன்னர்) நஜ்ஜாஸி இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை அறிவித்த நபி (ஸல்) அவர்கள், 'உங்கள் சகோதரருக்காக நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி :1327 அபூஹூரைரா (ரலி)

557.நஜ்ஜாஸி மரணித்ததும் அன்றே அச்செய்தியை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு முஸல்லா எனும் திடலில் அனைவரையும் ஒன்று கூட்டி அணிவகுக்கச் செய்து, நான்கு தக்பீர் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

புஹாரி : 1333 ஜாபிர் (ரலி)

558.''இன்றைய தினம் அபிஸீனியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன்.

புஹாரி :1320 ஜாபிர் (ரலி)

No comments: