Friday, August 24, 2007

முடியைக் குறைத்தல் அல்லது மழித்தல் பற்றி..

818. நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள்.

புஹாரி : 1726 இப்னு உமர் (ரலி).

819. 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரி!' எனக் கூறியதும் தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்'' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!'' எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்..'' என்றனர். நபி (ஸல்) அவர்கள் 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)'' என்று கூறினார்கள்.

புஹாரி : 1726 இப்னு உமர் (ரலி).

820. நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!'' எனப் பிரார்த்தித்தார்கள்; உடனே, தோழர்கள் 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்...'' என்றனர். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!'' என்று பிரார்த்தித்தபோது தோழர்கள் 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்...'' என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது முறையாகவும் அதைக் கூறியபோது 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக!)'' எனக் கூறினார்கள்.

புஹாரி :1728 அபூஹூரைரா (ரலி).

No comments: