Showing posts with label ஜிஹாத். Show all posts
Showing posts with label ஜிஹாத். Show all posts

Thursday, October 09, 2008

பெற்றோருக்குப் பரிவு காட்டுதல்.

பரிவு, நல்லுறவு, நல்லொழுக்கம்.

1652. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை'' என்றார்கள்.

புஹாரி : 5971 அபூஹூரைரா (ரலி).

1653. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப் போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'உன் தாயும் தந்தையும் உயிருடனிருக்கிறார்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'ஆம் (உயிருடனிருக்கின்றனர்)'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)'' என்று கூறினார்கள்.

புஹாரி :3004 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

Monday, March 31, 2008

அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்தலின் சிறப்பு.

1232. அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்து போகிற எந்த (நல்ல) அடியாரும் இந்த உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் அவருக்குக் கிடைக்கும் என்றிருந்தாலும் கூட உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்; இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவரைத் தவிர ஏனெனில், உயிர்த்தியாகத்தின் சிறப்பை (மறுமையில்) அவர் காண்கிறார். எனவே, இந்த உலகிற்கு மீண்டும் வந்து மறுபடியும் ஒருமுறை (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுவதை அவர் விரும்புவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2795 அனஸ் (ரலி).

1233. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அப்படி எதையும் நான் காணவில்லை'' என்று கூறிவிட்டு, 'அறப்போர் வீரன் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றுவிட்டால் (அவனுக்கு) இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீ உன் வணக்கத் தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'அது யாரால் முடியும்?' என்று பதிலளித்தார்.

புஹாரி : 2785 அபூஹூரைரா (ரலி).

Sunday, February 10, 2008

இஸ்லாத்தை ஏற்க மறுத்த நிராகரிப்போருடன் போர்.

அல்லாஹ்வின் பாதையில் அறப்போர். (ஜிஹாது)

1129. நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு (பதில்) கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் 'நபி (ஸல்) அவர்கள் பனூ முஸ்தலிக் குலத்தார் அசட்டையாக (எச்சரிக்கையின்றி) இருந்தபோது அவர்களின் மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள்; அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்னீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களில் போரிடும் திறன் பெற்றவர்களைக் கொன்றார்கள்; அவர்களின் மக்களை (பெண்கள், பிள்ளை குட்டிகளை) போர்க் கைதிகளாக சிறை பிடித்தார்கள்; அன்றுதான் ஜுவைரிய்யா (ரலி) அவர்களைக் கண்டார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அந்த (முஸ்லிம்) படையில் இருந்தார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
புஹாரி :2541 இப்னு அவ்ன் (ரலி).