Showing posts with label தொற்று நோய். Show all posts
Showing posts with label தொற்று நோய். Show all posts

Friday, July 18, 2008

சகுனம் இல்லை நற்குறி உண்டு.

1437. நபி (ஸல்) அவர்கள், 'தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது'' என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்றால் என்ன?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், '(மங்கலகரமான) நல்ல சொல்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5776 அனஸ் (ரலி).

1438. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்பதென்ன?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5754 அபூஹூரைரா (ரலி).

1439. தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனமும் கிடையாது. அபசகுனம் (இருக்க வேண்டுமென்றால்) மனைவி, வீடு, வாகனம் ஆகிய மூன்றில்தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5753 இப்னு உமர் (ரலி).

1440. அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும், வீட்டிலும் தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2859 ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ (ரலி) .

Thursday, July 17, 2008

தொற்று நோய் சகுனம் பற்றி....

1435. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'தொற்று நோய் கிடையாது.' ஸஃபர்' தொற்றுநோயன்று. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது'' என்று கூறினார்கள். அப்போது கிராமவாசியொருவர், 'இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?' என்று கேட்டார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?' என்று திருப்பிக் கேட்டார்கள்.

புஹாரி : 5717 அபூஹூரைரா (ரலி).

1436. வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள். என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5774 அபூ ஹுரைரா (ரலி) .