Showing posts with label நரகவாசி. Show all posts
Showing posts with label நரகவாசி. Show all posts

Friday, December 12, 2008

நரகவாசி வேதனையிலிருந்து விடுபட.

1788. (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், 'பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், 'ஆம்''என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், 'நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை - எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை'' என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3334 அனஸ் (ரலி).