Showing posts with label படைத்தல். Show all posts
Showing posts with label படைத்தல். Show all posts

Thursday, July 24, 2008

காலத்தைத் திட்டாதே.

இனிய சொற்கள் கூறுதல்.

1449. வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :4826 அபூ ஹுரைரா (ரலி).

1450. திராட்சையை ('கண்ணியமானது' எனும் பொருள் கொண்ட) 'அல்கர்ம்' என்று பெயரிட்டழைக்காதீர்கள். 'மோசமான காலமே!' என்று (காலத்தை ஏசிக்) கூறாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்தவன்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6182 அபூ ஹுரைரா (ரலி).

1451. உங்களில் எவரும் 'உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொண்டு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு' என்று கூற வேண்டாம். 'என் எஜமான்; என் உரிமையாளர்' என்று கூறட்டும்.''என் அடிமை; என் அடிமைப் பெண்'' என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். 'என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்'' என்று கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2552 அபூ ஹூரைரா (ரலி).