Showing posts with label மயக்கம். Show all posts
Showing posts with label மயக்கம். Show all posts

Thursday, July 10, 2008

நோயாளியின் வாயில் பலவந்தமாக மருந்தைப் புகட்டாதே

1427. நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். அப்போது அவர்கள் எங்களை நோக்கி, 'என்னுடைய வாயில் மருந்தூற்றாதீர்கள்'' என்பது போல் சைகை செய்யலானார்கள். 'நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நபி அவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாம் எனத் தடை செய்யவில்லை)'' என்று நாங்கள் சொல்லிக்கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது, 'என் வாயில் மருந்தை ஊற்ற வேண்டாமென நான் தடுக்கவில்லையா? (அப்படியிருந்தும் ஏன் நான் மயக்கத்திலிருந்தபோது மருந்தூற்றினீர்கள்,'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், '(ஆம்! தடுத்தீர்கள்) நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நீங்களும் இதை வெறுத்து, 'வேண்டாம்' என்கிறீர்கள் என நாங்கள் நினைத்தோம்)'' என்று கூறினோம். அவர்கள், 'நான் பார்த்துக் கொண்டிருக்க, ஒருவர் பாக்கியில்லாமல் இந்த வீட்டிலுள்ள அனைவர் வாயிலும் மருந்தூற்றப்படவேண்டும்'' என்று கூறிவிட்டு, 'ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், (மருந்தூற்றும்போது) உங்களுடன் அவர் கலந்து கொள்ளவில்லை'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4458 ஆயிஷா (ரலி).