Friday, June 27, 2008
Thursday, July 12, 2007
ரமலான் இறுதிப் பத்தில் அதிக வணக்க வழிபாடுகளில் இருத்தல்.
730. (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்!'
Posted by
Jafar ali
at
8:24 am
0
comments
Labels: ரமலான்
Wednesday, July 11, 2007
இஃதிகாஃப் இருக்க நாடுபவர்....
729. நபி (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா (ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி (ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதை விட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Posted by
Jafar ali
at
8:10 am
0
comments
Labels: ரமலான்
Tuesday, July 10, 2007
ரமலான் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப்.
727. ''நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!''
728. ''நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!''
Posted by
Jafar ali
at
8:45 am
0
comments
Labels: ரமலான்
Monday, July 09, 2007
லைத்துல் கத்ர் சிறப்பு.
723. நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர் (இரவு) காட்டப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!'' என்று கூறினார்கள்.
724. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!'' என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்னீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி (ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.
725. நபி (ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தம் இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி (ஸல்) அவர்கள் இரண்டு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், 'நான் இந்தப் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் அந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது; எனவே, கடைசிப்பத்து நாள்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாள்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வதுபோல் (கனவு) கண்டேன்!' எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை நான் எண் கண்களால் பார்த்தேன்! மேலும், நபி (ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, ஸுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் கண்டேன்.
726. நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!'' எனக் கூறுவார்கள்.
Posted by
Jafar ali
at
7:46 am
0
comments
Labels: ரமலான்
Saturday, June 30, 2007
ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்புகள் பற்றி...
703. எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.
Posted by
Jafar ali
at
10:17 am
0
comments
Labels: ரமலான்
Thursday, June 21, 2007
நோன்பில் மனைவியுடன் உடலுறவு கொண்டால்...
678. ''ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து '(என்னைப் போன்ற) பாமரர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் கூடிவிட்டால் (பரிகாரம் என்ன?)'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா?' என்று கேட்டார்கள். அவர் 'இயலாது!'' என்றார். 'அறுபது ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அவர் 'இல்லை'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டு வரப்பட்டது. 'இதை உம் சார்பாக வழங்குவீராக!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கவர் 'எங்களை விட ஏழைக்கா? மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடையோர் வேறு யாரும் இல்லை!'' என்று கூறினார். 'அப்படியானால் உம் குடும்பத்தாருக்கே இதை உண்ணக் கொடுத்து விடுவீராக!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
679. (ரமளான் மாதத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'நான் கரிந்து போனேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'எதனால் அப்படி?' என்று கேட்டார்கள். அவர், 'நான் ரமளான் மாதத்தில் (நோன்பு வைத்துக்கொண்டு) என் மனைவியைப் புணர்ந்துவிட்டேன்'' என்றார். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், 'தர்மம் செய்!'' என்றார்கள். அவர், '(தர்மம் செய்ய) என்னிடம் ஏதுமில்லை'' என்று கூறிவிட்டு, (அப்படியே) அமர்ந்துகொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் தம் கழுதையை ஓட்டிக்கொண்டு வந்தார். அவரிடம் உணவு இருந்தது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் இப்னு காசிம் (ரஹ்) அவர்கள் 'நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டு வந்த உணவு என்ன? என்பது எனக்குத் தெரியாது'' என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'கரிந்து போனவர் எங்கே?' என்று கேட்டார்கள். அவர், 'இதோ நான் இங்குதான் இருக்கிறேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'இதை வாங்கிக் கொண்டுபோய் தர்மம் செய்!'' என்றார்கள். அவர், 'என்னைவிடத் தேவையானவருக்கா? என் குடும்பத்தாருக்கு உணவே இல்லை'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'அப்படியானால், அவர்களுக்கே உண்ணக்கொடு'' என்றார்கள்.
Posted by
Jafar ali
at
4:59 pm
0
comments
Labels: ரமலான்
Sunday, June 17, 2007
நோன்பு திறக்கும் நேரம்.
668. ''சூரியன் மறைந்து, இந்த(கிழக்கு) திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
669. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், '(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!'' என்றார். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், 'இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!'' என்றார்கள். அப்போதும் அம்மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!'' என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி மாவைக் கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தம் கையால் (கிழக்கே) சுட்டிக் காட்டினார்கள் பிறகு, 'இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்! என்றார்கள்.
Posted by
Jafar ali
at
5:34 pm
0
comments
Labels: ரமலான்
Saturday, June 16, 2007
ஸஹர் செய்வதின் சிறப்பு.
665. ''நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
666. நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாரானோம்.)'ஸஹருக்கும் தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?' என்று கேட்டேன். அதற்கு ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) நேரம்' என்று பதிலளித்தார்கள் என அனஸ் (ரலி) கூறினார்.
Posted by
Jafar ali
at
1:56 pm
0
comments
Labels: ரமலான்
Friday, June 15, 2007
நோன்பின் ஸஹர் நேரம் பற்றி....
660. 'கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை' என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி (ஸல்) அவர்கள் '(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!'' என்று பதிலளித்தார்கள்.
661. ''கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!'' என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் 'மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)' என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் 'மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)' என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) இறங்கியது. 'இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்'' என்று அப்போதுதான் மக்கள் விளங்கினர்!''
662. ''பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.'' இதை அறிவிக்கும் இப்னு உமர் (ரலி) 'அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் கண்பார்வை இல்லாதவராக இருந்தார். அவரிடம் ஸுபுஹ் நேரம் வந்துவிட்டது என்று கூறப்பட்டால்தான் பாங்கு சொல்வார்' என்று கூறினார்கள்.
663. பிலால் (ரலி), (ஃபஜ்ரு நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர்தாம் ஃபஜ்ரு (வைகறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!'' என்று குறிப்பிட்டார்கள்.
664. ''நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விடவேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும் தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும்தான் பிலால் பாங்கு சொல்கிறாரே தவிர ஸுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று.'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் கை விரலை மேலும் கீழுமாக உயர்த்தி சைகை செய்தார்கள்.
Posted by
Jafar ali
at
3:03 pm
0
comments
Labels: ரமலான்
Thursday, June 14, 2007
மாதங்கள் 29 நாட்களாகவுமிருக்கும்.....
658. நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் ஒருமாதம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். இருபத்தொன்பதாம் நாள் 'காலையில்' அல்லது 'மாலையில்' துணைவியரிடம் சென்றார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அவர்களிடம் ஒரு மாதம் செல்ல மாட்டேன் எனச் சத்தியம் செய்(திருந்)தீர்களே?' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், 'மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம்'' என்று பதிலளித்தார்கள்.
659. ''துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Posted by
Jafar ali
at
1:57 pm
0
comments
Labels: ரமலான்
Wednesday, June 13, 2007
ரமலானுக்கு முந்திய ஓரிரு நாட்கள் நோன்பிருப்பது பற்றி.
657. ''ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முன்புள்ள நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக்கூடாது. அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால்அந்நாளில் நோன்பு நோற்கலாம்!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Posted by
Jafar ali
at
5:02 pm
0
comments
Labels: ரமலான்
Tuesday, June 12, 2007
பிறை பார்த்து நோன்பு நோற்றல் விடுதல்.
653. ''ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
654. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்'' என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு 'மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்'' (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) - இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை' இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள்.
655. நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
656. ''பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Posted by
Jafar ali
at
1:52 pm
0
comments
Labels: ரமலான்
Monday, June 11, 2007
ரமலான் மாதத்தின் சிறப்பு.
652. ''ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Posted by
Jafar ali
at
5:02 pm
0
comments
Labels: ரமலான்