Showing posts with label வெட்கம். Show all posts
Showing posts with label வெட்கம். Show all posts

Sunday, August 10, 2008

நபி(ஸல்) அவர்கள் அதிக வெட்க சுபாவம் உள்ளவர்கள்.

1499. நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர்.

புஹாரி :3562 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1500. நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. 'உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே'' என்று அவர்கள் கூறுவார்கள்.

புஹாரி :3559 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

Saturday, June 28, 2008

சபையில் அமரும் ஒழுக்கம்.

1405. 'நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 66 அபூ வாக்கித் அல்லைஸீ (ரலி).

1406. ஒருவர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு இவர் அந்த இடத்தில் அமர வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6269 இப்னு உமர் (ரலி)

Monday, February 25, 2008

எதிரி நிலத்திலிருந்து உணவைப் பெறுதல்.

1161. நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர், கொழுப்பு அடங்கிய தோல்பை ஒன்றை எறிந்தார். நான் அதை எடுக்க விரைந்து சென்றேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன்.

புஹாரி 3153 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி).