இஸ்லாத்திற்கு முந்தைய கெட்ட செயல்கள்
இஸ்லாம் முந்தைய கெட்ட செயல்களை அழித்து விடுகிறது என்பது பற்றி.....
76- இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர். விபச்சாரம் அதிகமாகச் செய்திருந்தனர்.(ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்பு விடுகின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்டப்பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே) என்று கூறினர். அப்போது (ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும் (கொலை செய்யக் கூடாது) என்று அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை. மேலும் விபச்சாரம் செய்வதில்லை எனும் (25:68 ஆவது) வசனம் அருளப்பெற்றது. மேலும் (நபியே!) கூறுங்கள்: வரம்பு மீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவ நம்பிக்கைக் கொண்டு விடாதீர்கள்... எனும்( 39:53 ஆவது) வசனமும் அருளப்பெற்றது.
புகாரி-4810: இப்னு அப்பாஸ் (ரலி)
No comments:
Post a Comment