Saturday, July 22, 2006

ஷைத்தானிய எண்ணம்

ஒரு விசுவாசியின் உள்ளத்தில் எழும் கெட்ட எண்ணம் குறித்து......

83- மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்விகேட்டுக் கொண்டேயிருப்பார்கள். இறுதியில்,அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ், இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கூடக் கேட்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-7296: அனஸ் பின் மாலிக்(ரலி)

82- உங்களில் ஒருவரிடம் (அவர் மனதிற்குள்) ஷைத்தான் வந்து, இதைப் படைத்தவர் யார்? இதைப்படைத்தவர் யார்? என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில் உன் இறைவனைப் படைத்தவர் யார்? என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும் (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-3276: அபூஹூரைரா(ரலி)

No comments: