சந்தைக்கு வரும் பொருளை இடைமறித்து வாங்காதே.
973. ''(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :2158 இப்னு அப்பாஸ் (ரலி).
கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!'' என்பதன் பொருள் என்ன?' என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் 'இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)' என பதிலளித்தார்கள்'' என்று தாவூஸ் (ரஹ்) கூறினார்.
974. ''கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!'' என்று எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது!''
புஹாரி :2161 அனஸ் (ரலி).

No comments:
Post a Comment