கைக்கு வந்து சேரும் முன்பு விற்காதே.
975. ''கைக்கு வந்து சேருவதற்கு முன் விற்கக் கூடாது!'' என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தது, உணவுப் பொருட்களுக்குத் தான்! (ஆயினும்) எல்லாப் பொருட்களுக்கும் இவ்வாறுதான் என்று கருதுகிறேன்!''
புஹாரி :2135 இப்னு அப்பாஸ் (ரலி)
976. ''ஒருவர் உணவுப் பொருளை வாங்கினால் அது (முழுமையாக) அவரின் கைக்கு வந்து சேராமல் அதை அவர் விற்கக் கூடாது!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :2126 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
977. ''நபித்தோழர்கள் உணவுப் பொருட்களைக் கடை வீதி துவங்கும் இடத்தில் வாங்கி அதே இடத்தில் விற்று வந்தனர்; எனவே, கடைத் தெருவுக்குள் கொண்டு செல்லாமல் வாங்கிய இடத்திலேயே விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!''
புஹாரி :2167 இப்னு உமர் (ரலி).

No comments:
Post a Comment