சகுனம் இல்லை நற்குறி உண்டு.
1437. நபி (ஸல்) அவர்கள், 'தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது'' என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்றால் என்ன?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், '(மங்கலகரமான) நல்ல சொல்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி :5776 அனஸ் (ரலி).
1438. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்பதென்ன?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி :5754 அபூஹூரைரா (ரலி).
1439. தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனமும் கிடையாது. அபசகுனம் (இருக்க வேண்டுமென்றால்) மனைவி, வீடு, வாகனம் ஆகிய மூன்றில்தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5753 இப்னு உமர் (ரலி).
1440. அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும், வீட்டிலும் தான் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 2859 ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ (ரலி) .
No comments:
Post a Comment