Wednesday, April 02, 2008

மக்களில் சிறந்தவர் யார்?

1237. ''இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?' என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)'' என்று பதிலளித்தார்கள். மக்கள், 'பிறகு யார்?' என்று கேட்டார்கள். 'மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

புஹாரி : 2786 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

No comments: