நிராகரிப்போர் முகத்தால் நடத்தல்.
1789. ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! இறை மறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'இந்த உலகில் அவனை இரண்டு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?' என்று (பதிலுக்குக்) கேட்டார்கள். (இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா இப்னு திஆமா (ரஹ்) 'ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!'' என்று கூறினார்கள்.
புஹாரி :4760 அனஸ் (ரலி).
No comments:
Post a Comment