Showing posts with label இறை நம்பிக்கை. Show all posts
Showing posts with label இறை நம்பிக்கை. Show all posts

Sunday, December 14, 2008

இறை நம்பிக்கையாளன் நிராகரிப்பவனின் உதாரணம்.

1790. இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்து விடும். காற்று நின்று விட்டால், அது நேராக நிற்கும். சோதனையின் போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5644 அபூஹுரைரா (ரலி).

1791. இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5643 கஅப் பின் மாலிக் (ரலி).

1792. 'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று நபி (ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'பேரீச்சை மரம்' என்றார்கள்'' .

புஹாரி : 61 இப்னு உமர் (ரலி).

Sunday, October 19, 2008

விசுவாசியைத் திட்டாதே.

1673. நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) ஏசியிருந்தால், அதையே மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றி விடுவாயாக!'' என்று கூறியதை செவியுற்றேன்.

புஹாரி :6361 அபூஹூரைரா (ரலி).

Friday, October 17, 2008

விசுவாசிகள் ஒருவர் மற்றவரை நேசிப்பர்.

1670. ''ஒரு கட்டிடித்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அது போன்றே ஒரு இறை நம்பிக்கையாளர் இன்னொரு இறை நம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்'' என்று நபி (ஸல்) கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.

புஹாரி 481 அபூமூஸா (ரலி).

1671. ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6011 நுஅமான் இப்னு பஷீர் (ரலி).

Wednesday, October 08, 2008

பெர்ஸிய மக்களின் சிறப்பு. (பாரசீகம்)

1650. நாங்கள் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு 'அல்ஜுமுஆ' எனும் (62 வது) அத்தியாயத்தில் 'இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)'' எனும் (3 வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, 'அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல் ஃபாரிஸீ (ரலி) இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் மீது தம் கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் 'சில மனிதர்கள்' அல்லது 'இவர்களில் ஒருவர்' அதனை அடைந்தே தீருவார்' என்று கூறினார்கள்.

புஹாரி 4897 அபூஹூரைரா (ரலி).

1651. மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்கள் போன்றவர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை நீ காண்பது அரிது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6498 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).