Showing posts with label தங்கம். Show all posts
Showing posts with label தங்கம். Show all posts

Saturday, December 20, 2008

சுவனத்தில் புகும் முதல் அணியினர் பற்றி....

1805. 'சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.

புஹாரி : 3327 அபூஹுரைரா (ரலி).

Tuesday, October 07, 2008

நபித் தோழர்களைத் திட்டாதீர்கள்.

1649. என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3673 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).

Monday, June 02, 2008

மோதிரத்தில் இலச்சினை.

1356. நபி (ஸல்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் 'அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்க மாட்டார்கள்' என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் 'முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்'' என்பதாகும். நபி (ஸல்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது'' என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

புஹாரி : 65 அனஸ் (ரலி)


1357. ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் வெள்ளிமோதிரம் ஒன்றை கண்டேன். பிறகு மக்கள், (அதைப்போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து) கொண்டார்கள்.எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் அணிந்திருந்த) தம் (தங்க) மோதிரத்தை(க் கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும் தம் (தங்க) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்துவிட்டனர்.

புஹாரி :5868 அனஸ் (ரலி).

Sunday, June 01, 2008

வெள்ளி மோதிரம் அணிய அனுமதி.

1354. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூ பக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது 'அரீஸ்' எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்றிருந்தது.

புஹாரி :5873 இப்னு உமர் (ரலி).


1355. நபி (ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, 'நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் ('முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். எனவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்களின் சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத்திரையில்) பார்க்கிறேன்.

புஹாரி : 5874 அனஸ் (ரலி).

Saturday, May 31, 2008

தங்க மோதிரம் அணியத் தடை.

1352. நபி (ஸல்) அவர்கள் தங்க மோதிரத்தை அணியவேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடைவிதித்தார்கள்.


புஹாரி : 5864 அபூஹூரைரா (ரலி).

1353. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தம் உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைத் தயார் செய்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழறறிவிட்டு, 'நான் இந்த மோதிரத்தை உள்ளங்கைப் பக்கமாக அதன் குமிழ் அமையும்படி அணிந்து கொண்டிருந்தேன்'' என்று கூறி, அதை எறிந்துவிட்டார்கள். பிறகு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்'' என்று கூறினார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை(க் கழற்றி) எறிந்தனர்.


புஹாரி :6651 இப்னு உமர் (ரலி).

Saturday, May 24, 2008

தங்க ஆபரணங்கள் அணிய ஆண்களுக்குத் தடை.

1338. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள். நோயாளிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் -எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லும்படியும், விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், சலாம் எனும் முகமனைப் பரப்பும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

மேலும், (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், (யாரும்) வெள்ளிப் பாத்திரத்தில் நீர் அருந்த வேண்டாமென்றும், மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும், சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

புஹாரி :5635 அல் பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1339. நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான் (ரலி) அவர்களிடம் (இராக்கில் உள்ள 'தைஃபூன்' நகரில்) இருந்தோம். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். அக்னி ஆராதனை செய்பவர் (மஜூஸி) ஒருவர் (வெள்ளிப் பாத்திரத்தில்) தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கோப்பையை அவர்களின் கையில் அவர் வைத்தபோது அதை அவர்கள் அவரின் மீது வீசியெறிந்தார்கள். பிறகு 'நான் பலமுறை இவரை (வாய்மொழியால்) தடுத்திராதிருந்தால்...'' என்று கூறினார்கள். (அதாவது 'பல முறை வாய்மொழியால் தடுத்தபோது அவர் இணங்கியிருந்தால்) நான் இவ்வாறு (வீசியெறியும் செயலைச்) செய்திருக்க மாட்டேன்'' என அவர்கள் சொல்வதைப் போன்றுள்ளது. ஆயினும், (நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்றால்,) நபி (ஸல்) அவர்கள் 'சாதாரண பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியாதீர்கள். பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியனவாகும்'' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

புஹாரி : 5426 அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி).

1340. பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர் (ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) கேட்டார்கள். ''மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களுக்குச் சில பட்டாடைகள் வந்தன. அதில் ஓர் ஆடையை உமர் (ரலி)க்குக் கொடுத்தனர். அதற்கு உமர் (ரலி) 'பட்டாடை பற்றி வேறு விதமாக நீங்கள் கூறிவிட்டு அதை எனக்குக் கொடுக்கின்றீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீர் அணிவதற்காக இதை உமக்கு நான் தரவில்லை' என்று கூறினார்கள். அந்த ஆடையை மக்காவில் இருந்த முஷ்ரிக்கான தம் சகோதரருக்கு உமர் (ரலி) வழங்கினார்கள்.

புஹாரி : 886 இப்னு உமர் (ரலி).

1341. நாங்கள் உத்பா இப்னு ஃபர்கத் (ரலி) அவர்களுடன் (ஈரானிலுள்ள) ஆதர்பைஜானில் இருந்தபோது எங்களிடம் உமர் (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.

புஹாரி :5828 அபூ உஸ்மான் அந்நஹ்தி (ரலி).

1342. நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.

புஹாரி : 2614 அலி (ரலி)

1343. '(ஆண்களில்) இம்மையில் பட்(டா)டை அணிகிறவர் மறுமையில் ஒருபோதும் அதை அணியமாட்டார்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.

புஹாரி: 5832 அனஸ் (ரலி).


1344. 'நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டினாலான மேல் அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து தொழுதார்கள். தொழுகையை முடித்த பின்னர் அந்த அங்கியில் வெறுப்புற்றவர்களைப் போன்று வேகமாக அதைக் கழற்றி எறிந்துவிட்டுப் 'பயபக்தியுடையவர்களுக்கு இந்த ஆடை உகந்ததன்று' என்று கூறினார்கள்'.'

புஹாரி : 375 உக்பா இப்னு ஆமிர் (ரலி).

Friday, May 23, 2008

தங்க வெள்ளிப் பாத்திரங்களை உண்ண பருக உபயோகிக்கத் தடை.

ஆடை அணிகலன்கள்.

1337. வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் நரக நெருப்பையே விழுங்கி நிரப்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5634 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலி) .