Showing posts with label நரை. Show all posts
Showing posts with label நரை. Show all posts

Sunday, August 17, 2008

முதல் வஹியின் போது நபிகளாரின் வயது.

1514. அனஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களின் உருவ அமைப்பை விவரிக்கக் கேட்டேன். அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள்; நெட்டையானவர்களாகவும் இல்லை. குட்டையானவர்களாகவும் இல்லை. பொன்னிறமுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை. கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை. முழுக்கவே படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வகை முடியை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருந்தபோது அவர்களுக்கு குர்ஆன் அருளப்படலாயிற்று. குர்ஆன் அருளப்படும் நிலையிலேயே மக்கா நகரில் பத்து ஆண்டுகள் தங்கி வசித்து வந்தார்கள். மதீனா நகரிலும் பத்து ஆண்டுகள் வசித்து வந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலேயே இறந்து விட்டார்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி :3547 ரபிஆ பின் அபீஅப்துர் ரஹ்மான் (ரலி).

Friday, August 15, 2008

நபி (ஸல்) அவர்களின் நரை முடி பற்றி....

1510. நான் அனஸ் (ரலி) அவர்களிடம், 'நபி (ஸல்) அவர்கள் (தம் நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நபி (ஸல்)அவர்களுக்குச் சிறிதளவே நரை ஏற்பட்டிருந்தது'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5894 அனஸ் (ரலி).

1511. நபி (ஸல்) அவர்களை பார்த்திருக்கிறேன். அவர்களின் கீழுதட்டின் அடியிலுள்ள (தாடைக்கு மேலுள்ள) குறுந்தாடியில் நான் வெண்மையைக் கண்டேன்.

புஹாரி : 3545 வஹப் அபீ ஜூஹைஃபா (ரலி).

1512. நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன். ஹஸன் (ரலி) (தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கிறார்கள்.

புஹாரி :3543 வஹப் அபீ ஜூஹைஃபா (ரலி).